மாநிலம்

முதல்வரிடம் நடிகர் விவேக் மனைவி வைத்த முக்கிய கோரிக்கை!

காமதேனு

விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என்று அவரது மனைவி, தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் 'சின்ன கலைவாணர்' என்று அழைக்கப்பட்டவர் விவேக். தனது நகைச்சுவை நடிப்பால் முத்திரைப்பதித்த விவேக், சில படங்களில் கதாநாயகனாகவும் தோன்றியுள்ளார்.

மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் கண்ட கனவு படி தமிழகத்தில் 1 கோடி மரங்களை நட வேண்டும் என்ற தொடர் முயற்சியில் நடிகர் விவேக் ஈடுபட்டிருந்தார். 'மரக்கன்றுகளை நட்டால் காற்றில் உள்ள நச்சுத்தன்மை குறையும்' என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்ததுடன் தமிழகம் முழுவதும் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க காரணமாக இருந்தார்.

பத்மஸ்ரீ உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்ற விவேக், கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். காவல்துறை மரியாதையுடன் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி தமிழக முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்தார். அப்போது, “ விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும்” என்று அவர் கோரிக்கை கடிதம் அளித்தார்.

SCROLL FOR NEXT