மாநிலம்

திமுக அரசு யாருக்கும் அடிபணியாது: ஆதீன விவகாரத்தில் ஸ்டாலின் அதிரடி

காமதேனு

"திமுக ஆன்மீகத்துக்கு எதிராக இருப்பது போல சிலர் திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள். யாருக்கும் ஒருபோதும் நாங்கள் அடிபணிய மாட்டோம்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தருமபுர ஆதீனம் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியில் பல்லக்கு தூக்க தடை விதிக்கப்பட்ட சம்பவம் இன்று சட்டசபையில் எதிரொலித்தது. பட்டினப் பிரவேச நிகழ்வில் விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தார். அப்போது அவர்," சன்னிதானத்துக்கும், சடங்குகளுக்கும் பிரச்சினை இல்லாமல் முதல்வர் நடுநிலையோடு தீர்வு காண்பார்" என்று கூறினார். இதைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும், அது தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “திமுக ஆன்மீகத்துக்கு எதிராக இருப்பது போல சிலர் திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள். இது தந்தை பெரியார் ஆட்சி, அறிஞர் அண்ணா உருவாக்கிய ஆட்சி, கருணாநிதி வழி நடத்திய ஆட்சி, மொத்தமாக சொல்ல வேண்டும் என்றால் இது திராவிட மாடல் ஆட்சி. யாருக்கும் ஒருபோதும் நாங்கள் அடிபணிய மாட்டோம்.” என்று கூறினார்.

SCROLL FOR NEXT