மாநிலம்

கோடநாடு கொலை வழக்கை விசாரித்த நீதிபதி திடீர் மாற்றம்: என்ன காரணம்?

காமதேனு

கோடநாடு கொலை வழக்கு நீதிபதி மாற்றம் சென்னை உயர்நீதிமன்றம்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா திடீரென தேனிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் மாவட்ட நீதிபதிகள் 55 பேர் இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்ட நீதிபதி ஐயப்பன் மற்றும் நீதிபதி ப்ளோரா சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளனர். நீதிபதி ஜெயச்சந்திரன் சென்னை உரிமையியல் நீதிமன்ற 5-வது கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், விழுப்புரம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், திருப்பத்தூர், சேலம், தேனி ஆகிய மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் பிறப்பித்துள்ளார்.

மேலும், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா திடீரென தேனிக்கு மாற்றப்பட்டுள்ளார். கோடநாடு வழக்கின் மேல் விசாரணையை கடந்தாண்டு ஜூலை முதல் நீதிபதி சஞ்சய் பாபா விசாரித்து வந்தார். தற்போது, கோடநாடு வழக்கை விசாரிக்க புதிய நீதிபதியாக முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோடநாடு வழக்கில் அண்மையில் சசிகலாவிடம் காவல் துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர். 2 நாட்கள் நடைபெற்ற இந்த விசாரணையில் சசிகலாவிடம் 100 கேள்விகள் கேட்கபட்டதாகவும் இதற்கு அவர் சரியான பதில் அளித்துள்ளதாகவும் கூறப்பட்டது. கோடநாடு வழக்கு தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி திடீரென மாற்றப்பட்டிருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

SCROLL FOR NEXT