தமிழக அரசு
தமிழக அரசு  hindu கோப்பு படம்
மாநிலம்

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியீடு

காமதேனு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 14 சதவிகிதம் உயர்த்தி, 1-1-2022 முதல் 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிட கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், அகவிலைப்படி உயர்வு தொடர்பாக தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, அகவிலைப்படி உயர்வு இம்மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், திருத்தப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் உயர்வு அளிக்கப்படும் என்றும் 2016ம் ஆண்டுக்கு முந்தைய விகிதத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT