தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள்
தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள் 
மாநிலம்

தேர்தல் பணிக்கு டிமிக்கி... சேலம் அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்!

காமதேனு

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் வராத அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள்...

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அரசு அதிகாரிகள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். அதன்படி, தேர்தல் பணியில் கல்வித்துறை மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, பரிசுப்பொருட்களை கொண்டு செல்வதை தடுக்கும் பணிக்காகவும், வாகன சோதனை பணிக்காகவும், பூத் சிலிப் வழங்கும் பணிக்காகவும் அனுப்பப்படுவார்கள்.

தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள்...

இந்த நிலையில், சேலம் மக்களவைத் தொகுதி தேர்தல் பணிக்கு கடந்த டிசம்பர் மாதம் அழைக்கப்பட்ட அரசு ஊழியர்களில் 1,781 ஊழியர்கள் தேர்தல் பணிக்கு வரவில்லை. இவர்கள் அனைவரும் தேர்தல் பணியை புறக்கணித்து விடுப்பில் சென்றனர். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், மருத்துவ விடுப்பில் சென்ற கல்வித்துறை ஊழியர்கள் 946 பேர் உள்பட 1,781 பேருக்கும் விளக்கம் கேட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இவர்களில் சரியான விளக்கம் அளிக்கப்படாதவர்கள் இடை நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறார்கள்.

இதேபோல், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 21 பேர் கடந்த டிசம்பர் மாத தேர்தல் பணிக்கு வருவதாக தெரிவித்திருந்தனர். ஆனால், அதில் ஒருவரை தவிர மற்ற 20 பேரும் பணிக்கு வர மறுத்துள்ளனர். இதனால், சம்பந்தப்பட்ட உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், தொகுப்பூதிய பணியாளர்களும் கட்டாயம் பணிக்கு செல்ல வேண்டும் என பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) விஸ்வநாத மூர்த்தி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...    

வரலாற்றில் உச்சம்... ரூ.51,000யைக் கடந்தது சவரன் விலை... ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு!

தேவாலய ஆராதனைக்குச் சென்றபோது ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து... 45 பேர் பலியான பரிதாபம்!

அதிர்ச்சி... சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பள்ளி இறுதித்தேர்வு தேதியில் திடீர் மாற்றம்... ரமலான் பண்டிகையை முன்னிட்டு நடவடிக்கை!

அடுத்த தோனி இவர் தான்... தோனியே புகழ்ந்த அந்த நபர் இவரா?

SCROLL FOR NEXT