மாநிலம்

தமிழகத்தில் அரசு வேலைக்காக தில்லாலங்கடி வேலை செய்த வடமாநிலத்தவர்கள்

காமதேனு

போலி சான்றிதழ் கொடுத்து மத்திய அரசு அலுவலகங்களில் வடமாநிலத்தவர்கள் வேலையில் சேர்ந்தது தமிழ்நாடு தேர்வுத்துறையின் சான்றிதழ் சரிபார்ப்பில் அம்பலமாகியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அமைந்த பிறகு தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் வடமாநிலத்தவர்களின் வருகை அதிகரித்து வருகிறது. தமிழக இளைஞர்கள் வேலையில்லாத நிலையில், வடமாநிலத்தவர்களின் வருகை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, வங்கிகள், ரயில்வே, என்எல்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். இதனை கண்டித்து அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளது அம்பலமாகியுள்ளது. அஞ்சல் ஊழியர் பணி, சி.ஆர்.பி.எஃப், இந்தியன் ஆயில் உள்ளிட்ட பல மத்திய அரசின் நிறுவனங்களில் 200-க்கும் அதிகமானோர் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யு.பி.எஸ்.சி கொடுத்த சரிபார்ப்பு நடவடிக்கையில், போலி சான்றிதழ்களை கண்டறிந்து அரசு தேர்வுகள் துறை உறுதி செய்திருக்கிறது. போலி சான்றிதழ் கொடுத்த நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கவும் அரசு தேர்வுகள் துறை அஞ்சல் துறைக்கு பரிந்துரை செய்துள்ளது.

SCROLL FOR NEXT