முருகன்
முருகன் 
மாநிலம்

வெளிநாட்டிற்கு அனுமதியின்றி வீடியோ கால் பேசிய வழக்கு!- ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி முருகன் விடுதலை!

காமதேனு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் முருகன் மீது வெளிநாட்டிற்கு வீடியோ கால் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்களை அரசு தரப்பு சமர்ப்பிக்கவில்லை எனக் கூறி நீதிபதி முருகனை விடுதலை செய்தார்.

முருகன்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேர் தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் ஆயுள் தண்டனை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 18-ம் தேதி பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் மத்திய சிறையில் முருகன் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு அனுமதியின்றி வெளிநாட்டிற்கு வீடியோ கால் பேசியதாக அவர் மீது சத்துவாச்சாரி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1 நீதிபதி அருண்குமார் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து முருகன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வெளிநாட்டிற்கு வீடியோ கால் பேசிய வழக்கில் அரசு தரப்பினர் போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை எனக் கூறி நீதிபதி அருண்குமார் குற்றம் சாட்டப்பட்ட முருகனை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT