முருகன்
முருகன் 
மாநிலம்

'பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது': வேலூரில் முருகன் குஷி!

பா.ஜெயவேல்

"பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது” என முருகன் கூறியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்தது. இது குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “மாநிலத்தினுடைய உரிமையானது இந்த தீர்ப்பின் மூலமாக மிகக் கம்பீரமாக நிலை நாட்டப்பட்டிருக்கிறது. சட்ட வல்லுநர்களுடன் கலந்துபேசி மற்றவர்களையும் விடுதலை செய்வதற்கான முயற்சிகளைத் தமிழக அரசு எடுக்கும்" என்றார்.

பேரறிவாளன்

பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் மத்தியச் சிறையிலும்,. ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் புழல் சிறையிலும், ரவிச்சந்திரன் மத்தியச் சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். பரோலில் இருக்கும் நளினி ஐந்தாவது முறையாக பரோல் கேட்டு சிறைத்துறைக்கு மனு அளித்திருக்கிறார். பேரறிவாளன் விடுதலை குறித்த தகவல் அறிந்ததும், சிறையில் உள்ள ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். வேலூர் மத்தியச் சிறையில் இருக்கும் முருகன், 2020-ம் ஆண்டு அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியது தொடர்பாக மூன்றாவது நாளாக இன்று வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்டார். அப்போது பேரறிவாளன் விடுதலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், "பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது” என மகிழ்ச்சி பொங்க கூறினார்.

SCROLL FOR NEXT