மாநிலம்

மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் பொன்முடி!

காமதேனு

தமிழக சட்டமன்றத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று கேள்வி நேரத்தின் போது பேசுகையில், "தமிழகத்தில் 509 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இதில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருப்பதால் 5 புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும், மாணவர்களுக்கு அதற்குரிய பயிற்சி அளிப்படுகிறது" என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், " முன்பு பாலிடெக்னிக் படித்தவர்கள், அண்ணா பல்கலை பொறியியல் படிப்புகளில் சேரமுடியாது. அந்த முறை மாற்றப்பட்டு, தற்போது, பாலிடெக்னிக் கல்லூரியில் படித்தவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு சேரலாம். பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள நிலையில், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியிலும் கட்டண குறைப்பு தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும்" அவர் கூறினார்.

SCROLL FOR NEXT