மாநிலம்

`நான் கோபாலபுரத்து விசுவாசி; இந்த துறையை கேட்டுப்பெற்றேன்'

காமதேனு

"நான் கோபாலபுரத்து விசுவாசி. நான் இந்த துறை வேண்டும் என நீர்வளத்துறையை கேட்டுப் பெற்றேன்" என்று கூறிய அமைச்சர் துரைமுருகன், தடுப்பணை கட்டுவதில் தமிழக அரசு முனைப்பு காட்டும் எனக் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீது பதிலுரை பேசிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், "இன்று பேரவையில் பேசுவதில் மனமகிழ்ச்சி அடைகிறேன். நான் கோபாலபுரத்து விசுவாசி. நான் இந்த துறை வேண்டும் என நீர்வளத்துறையை கேட்டுப் பெற்றேன். அனைத்து தொகுதிகளிலும் ஒரு தடுப்பணை கட்டலாம். இது கருணாநிதி திட்டம். தடுப்பணை கட்டுவதில் தமிழக அரசு முனைப்பு காட்டும்.

மேற்கு தொடர்ச்சி மலையில் எடுக்கப்படும் மண், விவசாயிகள் மற்றும் செங்கல் சூளை வைத்திருக்கும் நபர்களுக்கு வழங்கப்படும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள் நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். 250 கோடியில் வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். 8 மாவட்டங்களில் 10 இடங்களில் புதிய தடுப்பணை அமைக்கும் பணிகள் 70 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு மற்றும் விளவங்கோடு வட்டங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

டென்மார் நாட்டின் நவீன தொழில்நுட்பமான T-TEM பயன்படுத்தி பல்வேறு வகையான படிம அமைப்புகளின் இருப்பையும், நிலத்தடி நீர் இருப்பையும் கண்டறிந்து அதனடிப்படையில் நீர் இருப்பு மற்றும் நீர் செறிவு செய்ய ஏற்ற இடங்களை விவரணையாக (Mapping) தயாரிக்க சோதனை அடிப்படையிலான தேர்ந்தெடுக்கப்படும் என பகுதியில் முன்னோடித் திட்டமாக மேற்கொள்ளப்படும்" என்றார்.

SCROLL FOR NEXT