மாநிலம்

தீண்டாமை வன்கொடுமையில் மதுரை முதலிடம் : ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல்!

காமதேனு

தமிழகத்தில் தீண்டாமை வன்கொடுமையை அதிகம் கடைபிடிப்பதில் மதுரை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சாதியத் தீண்டாமை கடைப்பிடிக்கப்படும் கிராமங்கள் உள்ளிட்டவை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் கேள்வியெழுப்பியிருந்தார். இதற்கு அவருக்கு பதில் அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டு இறுதிவரை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு அறிக்கையின்படி, தமிழகத்தில் தீண்டாமை பாகுபாடு கடைப்பிடிக்கப்படும் கிராமங்களின் எண்ணிக்கை 445 ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக, மதுரை மாவட்டத்தில் 43 இடங்களில் தீண்டாமை பாகுபாடு கட்டப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 25 இடங்களிலும், நெல்லை மாவட்டத்தில் 24 இடங்களிலும் தீண்டாமை வன்கொடுமைகள் அதிகம் நடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சென்னை கடைசி இடத்தைப் பிடித்துள்ளதாக ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது.

SCROLL FOR NEXT