மாநிலம்

மக்களே உஷார்: தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

காமதேனு

குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நேற்று இரவு முதலே நல்லமழை பெய்துவருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அடுத்த நான்கு நாள்களுக்கு கனமழைத் தொடரும். இதேபோல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை என வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளதால் அது ரெட் அலர்ட் பட்டியலில் வருகிறது. வழக்கமாகவே 16 செ.மீ முதல் 20 செ.மீவரை மழை பெய்யும் தருணங்களில் மட்டுமே அதிகனமழை எனப்படும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்படுவது வழக்கம். குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்துவருவதால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது,

இதேபோல் கேரளத்தில் இன்று ஐந்து மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளம் முழுவதும் நல்லமழையும் பெய்து வருகிறது.

SCROLL FOR NEXT