தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு 
மாநிலம்

தங்கம் விலை மீண்டும் உயர்வு; சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு!

காமதேனு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 70 ரூபாயும், சவரனுக்கு 560 ரூபாயும் உயர்ந்து விற்பனையாகி வருகிறது.

தங்கத்தின் விலை கடந்த மார்ச் 1ம் தேதி முதல் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மே 10ம் தேதி அட்சய திருதியை நாளன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,240 ரூபாய் வரை உயர்ந்திருந்தது. இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சரிவைச் சந்தித்து வந்த நிலையில், நேற்று மீண்டும் தங்கத்தின் விலை உயரத் துவங்கியது.

தங்கம் விலை உயர்வு

நேற்று கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து, 6,725 ரூபாய்க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை மீண்டும் உயர்வைச் சந்தித்துள்ளது. இன்றைய காலை நேர வர்த்தகம் துவங்கியதில் இருந்தே தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்ததால் சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.6,795 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 560 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி நகைகள்

இதே போல் வெள்ளியின் விலையும் இன்று கணிசமாக அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி நேற்று 91 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று கிராமுக்கு ஒரு ரூபாய் 50 பைசா உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் வெள்ளி 92 ரூபாய் 50 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார்வெள்ளி 92,500 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT