கீழடி அகழாய்வு
கீழடி அகழாய்வு 
மாநிலம்

அகழாய்வுக்கு முக்கியத்துவம்#TNBudget2022

காமதேனு

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அகழாய்வு மற்றும் தொல்லியல் பணிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் புதிதாக திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்ப்பட்டி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, தருமபுரி மாவட்டம் பெரும்பாலை ஆகிய இடங்களில் அகழாய்வுகள் நடத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கற்கால இடங்களைத் தேடி 5 மாவட்டங்களில் கள ஆய்வு நடத்திடவும், பொருநை ஆற்றங்கரையில் தொல்லியல் இடங்களைத் தேடி கள ஆய்வு நடத்திடவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இடைச் சங்க கால பாண்டியர்களின் துறைமுகமாக விளங்கிய கொற்கையில் கடலடி அகழ்வாய்வு நடத்திட இந்திய கடல்சார் தொழில்நுட்ப கழகத்துடன் இணைந்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் அகழாய்வின் மூலம் கிடைத்துள்ள பொருட்களை பாதுகாத்திடவும், மாணவர்கள் இளைஞர்களுக்கு தொல்லியலில் ஆர்வத்தை ஏற்படுத்தவும் புதிய அருங்காட்சியகங்கள் விழுப்புரம் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஏற்படுத்தப்படும். குற்றாலம், பூண்டி, தருமபுரி உள்ளிட்ட இடங்களில் உள்ள அருங்காட்சியகங்கள் மேம்படுத்தவும் இந்த நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT