மாநிலம்

முதல்வர் ஸ்டாலினின் அடுத்த வெளிநாட்டு பயணம் தயார்!

காமதேனு

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஐக்கிர அரபு அமீரக பயணத்தை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்ததாக அமெரிக்கா, தென் கொரியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐக்கிர அரபு அமீரகத்திற்கு கடந்த மார்ச் 24-ம் தேதி சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.இந்தப் பயணத்தின்போது முதலீட்டாளர்களைச் சந்தித்தார் முதல்வர். முக்கிய தொழில் நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் மூலம் சுமார் 14,700 பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் அடுத்தகட்ட வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளும் முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளன என்றும் அடுத்தக்கட்ட சுற்றுப்பயணம் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கடந்த 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை அந்நிய நேரடி முதலீடு 41 சதவீதம் அதிகரித்திருப்பதாக ஒன்றிய அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

SCROLL FOR NEXT