மாநிலம்

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

காமதேனு

வங்கக்கடலில் வலுப்பெற்றிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வட தமிழக கடலோர பகுதியிலிருந்து 270 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் எதிரொலியாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்காலில் இன்று கனமழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் நாளை மிக கனமழை பெய்யக்கூடும்.

அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வங்கக் கடல் மன்னார் வளைகுடா அதையொட்டிய வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதிகளில் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் நாளை வரை மீனவர்கள் அந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்" என அறிவுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT