மாநிலம்

15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

காமதேனு

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வரும் நவம்பர் 2-ம் தேதிவரை மழை வாய்ப்பு இருக்கும் பகுதிகள் குறித்தும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது. இதனால் இன்று தமிழகத்தைப் பொறுத்தவரை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, கன்னியாகுமரி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்யும்.

இதேபோல் நாளை குமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யும்.

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில், தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை மாநகரின் சிலபகுதிகளில் மிதமான மழைபெய்யக்கூடும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT