மாநிலம்

97.05% அளவுக்கு நகைக்கடன் தள்ளுபடி: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

காமதேனு

ஒரே வாரத்தில் 97.05% அளவுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, பல ஆய்வுகளுக்கு பின் தகுதியான அனைத்து நபர்களுக்கு நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பெரியசாமி, தமிழ்நாட்டில் ஒரே வாரத்தில் ரூ.4,805 கோடிக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் ரூ.5,200 கோடிக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய திட்டமிட்டு அதில் 97.05 % கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

SCROLL FOR NEXT