கனமழை  
மாநிலம்

குடை எடுத்துச் சென்றாலும் கவனம் மக்களே... தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்!

காமதேனு

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் இருந்த போதும், கடந்த ஒருவாரமாக கோடைமழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நேற்றும் பரவலமாக மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் நீர் தேங்கி வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

கனமழை

இந்த நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் இன்று அனேக இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கான வாய்ப்பும் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

அந்த வகையில், தமிழ்நாட்டில் இன்று அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல், காற்றுடன் மிதமான மழையும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும் பெய்யும்.

கனமழை

விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT