விளையாட்டு

மகளிர் உலக கோப்பை: 134 ரன்னுக்கு இந்தியா ஆல் அவுட்

காமதேனு

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டின் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 134 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது.

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று மவுன்ட் மாங்கானுவில் நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்துடன் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யாஷ்டிகா பாட்டியாவும், மந்தனாவும் களமிறங்கினர். 8 ரன்னில் பாட்டியா வெளியேற, கேப்டன் மிதாலி ராஜ் 1 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

பின்னர் வந்த தீப்தி சர்மா ஒரு ரன்னில் வெளியேற, தீப்தி சர்மா டக் அவுட் ஆனார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 28 ரன்னில் 3 விக்கெட்டை இழந்து திணறியது. நம்பிக்கை வீரர் ஹர்மன்பிரீத் கவுர் 14 ரன்னில் ஆட்டம் இழந்தார். சிநேஹ் ராணா வந்த வேகத்தில் வெளியேறினார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்து கொண்டிருக்க மறுமுனையில் ஸ்மிரிதி மந்தனா நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். 35 ரன்கள் எடுத்தபோது மந்தனா ஆட்டம் இழந்தார்.

பின்னர் வந்த விக்கெட்கீப்பர் ரிச்சா கோஷ் 33 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருக்கு ஆல் ரவுண்டர் ஜூலன் கோஸ்வாமி உதவி செய்தார். இவர் 20 ரன்கள் அடித்தார். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்தது.

இறுதியில் இந்திய அணி 36.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து தரப்பில் சரோலெட் டீன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 13 ஓவர்கள் முடிந்த நிலையில் 2 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்கள் எடுத்துள்ளது.

SCROLL FOR NEXT