இந்திய ஹாக்கி அணி 
விளையாட்டு

சிலியில் இன்று தொடங்குகிறது மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி: கனடாவுடன் இந்தியா மோதல்!

காமதேனு

10வது ஹாக்கி மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை 2023 போட்டி சிலியில் இன்று தொடங்கும் நிலையில், முதல் போட்டியில் கனடாவை இந்தியா அணி எதிர்கொள்வதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

10வது FIH ஹாக்கி மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை 2023 போட்டி சிலியில் இன்று தொடங்குகிறது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி டிசம்பர் 10-ம் தேதி நிறைவடைகிறது. 

நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணிகளிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இடம்பெற்றுள்ள அணிகள் தங்கள் பிரிவுகளில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணி காலிறுதி போட்டிக்கு தகுதிபெறும்.

இந்திய ஹாக்கி அணி

அதன்படி, குரூப் சியில் இடம்பெற்றுள்ள இந்திய அணி - கனடா, பெல்ஜியம் மற்றும் முன்னாள் சாம்பியனான ஜெர்மனியுடன் போட்டியிடுகிறது. இந்தியா தனது ஹாக்கி உலகக் கோப்பை முதல் போட்டியில் இன்று கனடாவை எதிர்கொள்கிறது. தொடர்ந்து,  நாளைய தினம் பலம் வாய்ந்த ஜெர்மனி அணியையும், வருகின்ற சனிக்கிழமை பெல்ஜியத்தையும் எதிர்கொள்கிறது. 

இந்தியா இன்று கனடாவை எதிர்கொள்ளும் நிலையில், வரலாற்றை எடுத்து பார்த்தால் இந்திய அணியே அதிகமாக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இதற்கு முன் கனடா அணியை இந்திய அணி மூன்றுமுறை சந்தித்துள்ளது. இந்த மூன்று முறையும் இந்திய அணியே வெற்றிபெற்றுள்ளது.

அதனால், இன்றைய போட்டியிலும் கனடா அணியை இந்திய அணி வீழ்த்தும் என்று எதிர்பார்க்கலாம். இன்றைய போட்டியானது இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.

SCROLL FOR NEXT