விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன்கள் நியமனம்!

காமதேனு

கேப்டன் பதவியை பாபர் அசம் ராஜினாமா செய்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் மற்றும் டி20  கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் அந்த அணி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. அணியின் தேர்வு குழு தலைவர் பதவியில் இருந்து முன்னாள் வீரர் இன்சமாம் பதவி விலகினார்.

அவரைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மார்கல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசம், தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக இன்று மாலை அறிவித்தார்.

பாபர் அசம் பதவி விலகியதை அடுத்து இரண்டு புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், அணியின் டெஸ்ட் கேப்டனாக ஷான் மசூத் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 போட்டிகளுக்கான கேப்டனாக ஷாகின் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக யாரையும் நியமிக்கவில்லை. முகமது ரிஸ்வான் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT