ரோஹன் போபண்ணா, மேத்யூவ் ஜோடி 
விளையாட்டு

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் - ரோஹன் போபண்ணா இணை இறுதிப் போட்டிக்கு தகுதி!

காமதேனு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி போட்டிக்கு ரோஹன் போபண்ணா- மேத்யூவ் இணை தகுதி பெற்றது.

ரோஹன் போபண்ணா, மேத்யூவ் ஜோடி

டென்னிஸ் விளையாட்டின் கெளரவம் என கருதப்படுவது கிராண்ட்ஸ்லாம் போட்டிகள். இதில், ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியாக நடத்தப்படுவது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர். இந்த ஆண்டின் ஆஸ்திரேலிய ஓபன் தொடர், கடந்த 14ம் தேதி மெல்போர்னில் தொடங்கியது. உலகின் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

ரோஹன் போபண்னா, மேத்யூவ் ஜோடி

இன்றும், நாளையும் அரையிறுதி போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபன்னா - அமெரிக்காவின் மேத்யூவ் எப்டன் இணை - சீனாவின் ஜாங் ஜிஜென் - செக் குடியரசின் தாமஸ் மச்சாக் இணையை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தின் முதல் சுற்றை ரோஹன் - மேத்யூவ் இணை 6-3 என அபாரமாக கைப்பற்றியது. இரண்டாவது சுற்று ஆட்டத்தில் சுதாரித்த ஜிங்ஜென் - தாமஸ் இணை, ரோஹன் இணைக்கு கடும் சவாலாக இருந்தது.

ரோஹன் போபன்னா

அவர்களின் முயற்சிக்கு பலனாக 6-3 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து, ஆட்டத்தின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் டிசைடர் சுற்றில் இரு தரப்பு வீரர்களும் சம பலத்துடன் திறமையை வெளிப்படுத்தினர். இதனால், 3வது சுற்று ஆட்டம் 6-6 என சமநிலை பெற்றது. இதையடுத்து, டை பிரேக்கர் நடத்தப்பட்டது. அதில் 10-7 என்ற புள்ளி அடிப்படையில் ரோஹன், மேத்யூஸ் இணை வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. ரோஹன் போபண்ணா இதுவரை 17 முறை ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் கலந்துகொண்டிருந்தாலும், இறுதிப் போட்டிக்குள் முதல் முறையாக நுழைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


தைப்பூச ஜோதி தரிசனம்... வடலூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

அதிர்ச்சி... காதல் திருமணம் செய்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகள் உயிரிழப்பு!

பட்ஜெட்டில் பென்ஷன்தாரர்களுக்கு குட் நியூஸ்... புதிய சலுகைகளுக்கு மத்திய அரசு பரிசீலனை!

பிரபல தொலைக்காட்சி செய்தியாளருக்கு அரிவாள் வெட்டு: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

நிதி நெருக்கடியில் தவிக்கும் பிரபல நிறுவனம்.. ₹ 8,245 கோடி இழப்பு!

SCROLL FOR NEXT