விளையாட்டு

ஆப்கானிஸ்தான் வீரரை அடிக்கப் பாய்ந்த பாகிஸ்தான் வீரர்: மைதானத்தில் வெடித்த மோதல்!

காமதேனு

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த சூப்பர் 4 ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிகொண்டன. ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்து 129 ரன்கள் எடுத்த நிலையில், அதனைத் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி கடைசி ஓவர்களின் ஆப்கன் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. இந்த நிலையில் 19 வது ஓவரை ஃபரீத் அஹ்மத் மாலிக் வீசினார். அந்த ஓவரில் பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி ஒரு சிக்ஸர் விளாசிவிட்டு பவுலரை சீண்டினார்.

இதற்கு அடுத்த பந்திலேயே ஆசிப் அலி கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனை ஆப்கன் ரசிகர் கொண்டாடினார்கள், பவுலர் அகமதுவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனால் ஃபரீத் அகமது மற்றும் ஆசிப் அலி இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அவுட் ஆகி வெளியேறும் முன்பு ஆசிப் அலி பேட்டை ஓங்கிக்கொண்டு அடிக்கும் விதமாக ஃபரீத் அகமதை தள்ளிவிட்டார். ஃபரீத்தும் அவரை எதிர்த்துக்கொண்டு முன்னேறினார். அதன்பின்னர்

அணியின் வீரர்கள் மற்றும் நடுவர்கள் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் மைதானத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து 20வது ஓவரில் ஓவரில் இரண்டு சிக்ஸர்களை தெறிக்கவிட்டு நசீம் ஷா பாகிஸ்தானை வெற்றிபெற வைத்தார். இதனால் விரக்தியடைந்த ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் சேர்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் - ஆப்கன் ரசிகர்களுக்கு இடையே கைகலப்பும் நடந்தது.

இந்த வெற்றியின் மூலம், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை போட்டியில் இருந்து வெளியேற்றிய பாகிஸ்தான், ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டியில் இலங்கையுடன் மோதுகிறது.

SCROLL FOR NEXT