பெண்கள் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி
பெண்கள் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி twitter
விளையாட்டு

சீனாவை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றது இந்தியா!

காமதேனு

பெண்கள் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் சீனாவை வீழ்த்தி, இந்தியா வெண்கலப்பதக்கம் வென்றது. 2-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்தியா 3-வது இடம் பிடித்தது.

பெண்களுக்கான 10-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்தது. அரைஇறுதியில் தென்கொரியாவிடம் தோல்வி அடைந்த நடப்பு சாம்பியனான இந்திய அணி, அடுத்து 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் சீனாவுடன் மோதியது. இதில் அபாரமாக ஆடிய இந்திய அணி, 2-0 என்ற கோல் கணக்கில் சீனாவை தோற்கடித்து 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.

13-வது நிமிடத்தில் ஷர்மிளா தேவியும், 19-வது நிமிடத்தில் குர்ஜித் கவுரும் பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக்கி, வெற்றிக்கு உதவினர். இதன் இறுதிப்போட்டியில், ஜப்பான் 4-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

SCROLL FOR NEXT