விளையாட்டு

ஐசிசி தரவரிசை: முதல் இடத்திலிருந்து சறுக்கினார் பும்ரா... கோலி, பாண்ட்யாவுக்கு எந்த இடம்?

காமதேனு

ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடாத இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

பும்ராவுக்கு பதிலாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் உலகின் நம்பர் ஒன் ஒருநாள் பந்து வீச்சாளராக முன்னேறியுள்ளார். இந்த சூழலில் இந்திய லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் 4 இடங்கள் முன்னேறி 16-வது இடத்தைப் பிடித்தார். ஆல்-ரவுண்டர்களுக்கான பட்டியலில் ஹர்திக் பாண்ட்யா 13 இடங்கள் முன்னேறி எட்டாவது இடத்தில் உள்ளார்.

இந்திய வீரர் ரிஷப் பண்ட் இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 125 ரன்கள் எடுத்தார். எனவே பண்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 25 இடங்கள் முன்னேறி 52 வது இடத்தை பிடித்துள்ளார்.

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்தில் இருக்கிறார், இந்திய வீரர் விராட் கோலி ஒரு இடம் சறுக்கி நான்காவது இடத்திலும், ரோகித் சர்மா ஐந்தாவது இடத்திலும் உள்ளார்.

SCROLL FOR NEXT