விளையாட்டு

இரட்டை சதம் விளாசிய 4-வது இந்திய வீரர் கிஷன்: 3 ஆண்டுகளுக்கு பிறகு சதம் அடித்த கோலி!

காமதேனு

வங்கதேசத்திற்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அதே நேரத்தில் இளம்வீரர் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து அனைவரையும் பிரமிக்க வைத்தார்.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடைந்த இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து 4-வது ஒருநாள் போட்டி சிட்டகாங்கில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த 409 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ஷிகர் தவான் 3 ரன்னில் வெளியேறியதும் இந்திய அணி அதிர்ச்சி அடைந்தது.

மற்றொரு தொடக்க வரை இஷான் கிஷன் அதிரடியாக விளையாடினார். இவருடன் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 305 ரன்கள் குறித்தது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா ஆகியோர் இரட்டை சதம் விளாசியுள்ளனர். தற்போது அந்த வரிசையில் இளம்வீரர் இஷான் கிஷன் இடம் பிடித்துள்ளார். இவர் 131 பந்துகளில் 210 ரங்கள் குவித்தார். இதில் 24 பவுன்டரி, 10 சிக்ஸர்கள் அடங்கும். அதே நேரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 91 பந்தில் 113 ரன்கள் அடித்தார். 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கோலி சதம் அடித்துள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்த இரண்டு விக்கெட்டுகளும் விழுந்த பிறகு இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஸ்ரேயாஸ் அய்யர் 3 ரன்னிலும், கே.எல்.ராகுல் 8 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 37 ரன்னிலும், அசார் பாட்டேல் 20 ரன்னிலும், தாகூர் 3 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். தற்போது வங்கதேச அணி பேட்டிங் செய்து வருகிறது.

SCROLL FOR NEXT