ஜோகோவிச் - சின்னர்  
விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்... நம்பர் 1 வீரர் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி!

காமதேனு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் நம்பர் 1 வீரர் நோவா ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

ஜெங் - சபலங்கா

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெலர்பர்ன் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆவடவர், மகளிர் என 128 வீரர், வீராங்கனைகள் இந்த போட்டி தொடரில் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.

இந்த போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற சீனாவின் கின்வென் ஜெங் - பெலாரஸின் ஆர்யனா சபலங்கா ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இருவரும் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

ஜானிக் சின்னர்

இந்நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டிகள் இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரும், செர்பியாவை சேர்ந்தவருமான ஜோகோவிச் - இத்தாலியின் ஜானிக் சின்னருடன் மோதினார். தொடக்கன் முதலே ஆக்ரோஷமாக விளையாடிய ஜானிக் 6-1, 6-2 என எளிதாக முதல் இரண்டு செட்களைப் கைப்பற்றினார். 3வது சுற்றில் சுதாரித்த ஜோகோவிச் வெற்றிக்காக கடுமையாகப் போராடினார்.

நோவா ஜோகோவிச்

ஆனால், சற்றும் தளராமல் ஜானிக்கும் அவருக்கு ஈடுகொடுத்தார். ஆனால், டை பிரேக்கர் மூலம் 7-6 என ஜோகோவிச் அந்த செட்டை கைப்பற்றினார். 4வது செட் ஆட்டத்தில் சூறாவளியாக ஆடிய சின்னர், ஜோகோவிச்சை 6-3 என்ற வீழ்த்தினார். இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் அவர் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். அத்துடன் முதல் முறையாக அவர் ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

SCROLL FOR NEXT