தொடர்கள்

மகா பெரியவா 57: அருளே ஆனந்தம்

காமதேனு

பி. சுவாமிநாதன்
swami1964@gmail.com

‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்பார்கள். அதாவது எங்கெல்லாம் மலைகள் காணப்படுகின்றனவோ, அங்கெல்லாம் முருகக் கடவுள் குடி கொண்டிருப்பார். பழநி மலை, திருத்தணி மலை, மருதமலை, சென்னிமலை, ஓதிமலை, அலகுமலை என்று முருகப் பெருமான் அருளாட்சி நடத்துகிற ஏராளமான மலைகளைப் பட்டியலிட முடியும்.
அந்த வகையில் சென்னை நகரத்தின் பிரதான பகுதியான குரோம்பேட்டையில் குமரன் குடி கொண்டிருக்கும் குன்றை, ஒரு மலையை அடையாளம் காண்பித்தவர் நடமாடும் தெய்வமாக இன்றைக்கும் நம்மிடையே விளங்கி வருகிற காஞ்சி மகா பெரியவா.
1960-களில் குரோம்பேட்டை பகுதியில் தன் சிப்பந்திகளுடனும் உள்ளூர்வாசிகளான பக்தர்களுடனும் பாத யாத்திரை சென்று கொண்டிருந்தார் பெரியவா. ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர’ கோஷத்துடன் பக்தர்கள் பரவசத்துடன் மகானுடன் நடந்து கொண்டிருந்தனர். அப்படி நடந்து கொண்டிருக்கும்போது பாதைக்கு அருகே ஒரு மலை தென்பட... திடீரென்று அப்படியே நின்றார் பெரியவா.

மகான் நின்றதும், உடன் வந்த பக்தர்களும் சிப்பந்திகளும் ‘சடன் பிரேக்’ போட்டது போல் அப்படியே நின்றனர். சர்வேஸ்வர சொரூபம் எதற்காக நின்றது என்பதை அறிந்து கொள்ளும் விதமாக அவரின் திருமுகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்தனர்.
கருணைக் கடலின் பார்வை அருகே இருந்த மலை மீது நிலை குத்தி நின்றிருந்தது. வைத்த கண் வாங்காமல் அந்த மலையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் வேறு எந்த விதமான சலனமும் இல்லை.

செடிகளும் கொடிகளும் மரங்களுமாக அடர்ந்து ஒரு காடுபோல் அன்றைக்குக் காட்சி தந்து கொண்டிருந்தது இந்த மலை. கண்களைச் சுருக்கிக் கொண்டு ஒரு சில நிமிடங்களுக்கு மலையையே கூர்ந்து கவனித்தவர், பிறகு உள்ளூர்வாசிகளை இடமும் வலமுமாகத் தலையைத் திருப்பிப் பார்த்தார்.

SCROLL FOR NEXT