நியாயவிலைக்கடை
நியாயவிலைக்கடை hindu கோப்பு படம்
மண்டலம்

நியாயவிலைக்கடையில் தரமற்ற பொருள் விநியோகம்- அதிகாரி சஸ்பெண்ட்

காமதேனு

திருப்பத்தூரில் நியாயவிலைக்கடையில் தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட உதவி தர ஆய்வாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பொதுமக்களுக்கு உடனடியாக புதிய தரமுள்ள பொருட்கள் வழங்கப்பட்டன.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் பகுதியில் நியாயவிலைக் கடை ஒன்றில் வழங்கப்பட்ட சில பொருட்கள் தரமற்றதாகவும், கலப்படம் செய்யப்பட்ட பொருட்களை வழங்குவதாகவும் சமூக ஊடகங்களில் புகார்கள் வெளியாகின. இதுகுறித்து உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து சம்பந்தப்பட்ட உதவி தர ஆய்வாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அந்த கடையில் இருந்த தரமற்ற பொருட்கள் அனைத்தும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு புதிய தரமான பொருட்கள் வழங்கப்பட்டன. தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை தமிழகத்தில் நியாய விலைக் கடைகள் மூலம் 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து கண்காணித்து, உரிய நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்கவும் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT