விழிப்புணர்வு பதாகைகளுடன் மாணவர்கள்
விழிப்புணர்வு பதாகைகளுடன் மாணவர்கள் 
மண்டலம்

`மாணவர்களே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க'- விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுவிலக்கு போலீஸார்

கரு.முத்து

திருச்சியில் பள்ளி மாணவர்களிடம் போதை பொருள் தடுப்பு, கள்ளச்சாராயம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரால் இன்று நடத்தப்பட்டது.

திருச்சி தென்னூர், சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸார் மூலம் போதை பொருள் தடுப்பு, கள்ளச்சாராயம் ஆகியவை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் சிந்துநதி கலந்து கொண்டு மாணவர்களிடம் பேசினார்.

"திருச்சி மாநகர பகுதிகளில் கள்ளச்சாராயம் , எரிசாராயம், போலி மதுபானம், சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்பவர்கள் ஆகியோர் இருப்பின் மதுவிலக்கு பிரிவு கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 தகவல் தெரிவிக்கலாம்" என்று விழிப்புணர்வு வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் பிரபு பேசுகையில் "போதைப் பொருளினால் குழந்தைகளின் கல்வி, எதிர்கால பாதிப்பு குறித்தும் குழந்தைகள் வசிக்கும் பகுதிகளில் இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் யாரேனும் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருந்தாலோ அல்லது சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் நபர்கள் இருப்பின் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்ணிற்கு தகவல் கொடுக்க வேண்டும்" என்று விழிப்புணர்வு வழங்கினார்.

இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மாநகர காவல்துறை மூலம் நோட்டு புத்தகம் , துண்டு பிரசுரங்கள் ஆகியவை வழங்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT