தங்கம்
தங்கம் hindu கோப்பு படம்
மண்டலம்

தங்கம் விலை திடீர் சரிவு!- என்ன காரணம்?

காமதேனு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கமாக இருந்த தங்கத்தின் விலை இன்று விலை சற்று குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.36,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கராேனா பாதிப்பு காரணமாக சமீப காலமாகவே உயர்ந்து வரும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. இதனால், திருமணம் மற்றும் மற்ற வீட்டு நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க ஏழை, நடுத்தர மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். தங்கம் விலை ஒரே நிலையாக இருக்காமல் ஏற்ற, இறக்கத்துடனே காணப்பட்டு வருகிறது. இதனிடையே இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,536 ஆக குறைந்து காணப்படுகிறது.

அதேபோல, நேற்று 36,288 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 36,240 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை இன்று ரூ.65.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 65,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சுத்த தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் சுத்த தங்கம் 4,945 ரூபாய்க்கு விற்பனையானது. 8 கிராம் சுத்த தங்கம் 39,560 ரூபாய்க்கு விற்பனையானது.

"தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்து வருவதாலும், திருமண சுபமூர்த்தம் என்பதாலும் வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்க அதிக அளவில் வருகின்றனர். இதனால் தங்கம் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளது" என தங்க நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.

SCROLL FOR NEXT