மண்டலம்

`பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்போம்'

கவிதா குமார்

கேரள அரசு வாகனங்களை சிறைபிடிப்போம் என எச்சரிக்கை விடுத்திருந்த ஐந்து மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளுடன் தேனி ஆட்சியர் முரளீதரன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தேக்கடியில் தமிழகத்தைச் சேர்ந்த பொதுப்பணித்துறை ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. இதில் மராமத்து பணிக்குச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த வாகனம் திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம், தமிழக எல்லைக்குள் வரும் கேரள அரசு வாகனங்களை குமுளியில் சிறைபிடித்து போராட்டம் நடத்த இன்று முடிவு செய்திருந்தது. இதற்கான ஏற்பாட்டில் இருந்த ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை அழைத்து தேனி ஆட்சியர் முரளீதரன் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமுக பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பதாக அவர் உறுதியளித்தார். இதுகுறித்து ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், ‘ சுமுக பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணாவிட்டால், அறிவித்தபடி போராட்டத்தை நடத்துவோம்’ என்று கூறினார்.

SCROLL FOR NEXT