தங்கம்
தங்கம் தி இந்து
மண்டலம்

சரிந்துவரும் தங்கம் விலை! - பவுன் ரூ.36,592

காமதேனு

தங்கம் விலை 2-வது நாளாக குறைந்துள்ளது. இன்று தங்கம் பவுனுக்கு ரூ.504 ரூபாய் சரிந்துள்ள நிலையில், ஒரு பவுன் ரூ.36,592-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மக்களை அச்சுறுத்தி வரும் கரோனா, ஒமைக்ரான் வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்கத்தின் விலையும் கடந்த சில நாட்களாகவே உயர்ந்து கொண்டே வந்தது. நேற்றும், இன்றும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.504 குறைந்து ஒரு கிராம் ரூ.4,574-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.36,592-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் கணிசமாக குறைந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.68.50-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.67.70 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 67,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று 5,003 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் சுத்த தங்கம் இன்று 4,940 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, சுத்த தங்கம் 39,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைவால் வாடிக்கையாளர்கள் தங்கத்தை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

SCROLL FOR NEXT