வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அமைச்சர்  ராமசந்திரன் தலைமையில் உதகையில் ஊர்வலம்
வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அமைச்சர் ராமசந்திரன் தலைமையில் உதகையில் ஊர்வலம்  
மண்டலம்

அமைச்சருடன் திமுகவினர் வெற்றி ஊர்வலம்... அமர்க்களமானது உதகை

காமதேனு

உதகை நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அமைச்சர் கா.ராமசந்திரன் தலைமையில் உதகையில் ஊர்வலம் சென்றனர். தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அமர்க்களப்படுத்தினர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19-ம் தேதி நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் 171 இடங்களில் திமுக சார்பில் போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்றனர். இது தவிர திமுக, கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். உதகை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 20 இடங்களில் திமுகவும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 இடங்களிலும் வெற்றி பெற்று தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இன்று உதகை நகராட்சியில் திமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அலுவலகம் வந்திருந்தனர். அங்கு, தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் மற்றும் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து, அங்குள்ள அண்ணா மற்றும் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பின்னர் அமைச்சர் கா.ராமசந்திரன் தலைமையில் உதகை நகரில் வெற்றி ஊர்வலம் சென்றனர். கேசினோ சந்திப்பு பகுதியில் தொடங்கிய இந்த ஊர்வலம் காபி அவுஸ், மணிக்கூண்டு, லோயர் பஜார், ஐந்து லாந்தர், மெயின் பஜார் வழியாக மத்திய பேருந்து நிலையத்தை அடைந்தது. அமைச்சர் மற்றும் வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

SCROLL FOR NEXT