அரசியல்

நான் ஏன் நாட்டை விட்டு ஓட வேண்டும்? :கொந்தளிக்கும் மகிந்த ராஜபக்ச

காமதேனு

விடுதலைப் புலிகளுடன் இருந்து நாட்டை மீட்டெடுத்த நான் ஏன் நாட்டை விட்டு ஓட வேண்டும் என்று இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுடன் நாடாளுமன்ற கட்டிடத்தில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கூறுகையில், “நான் எப்போதும் மக்களுடன்தான் இருக்கிறேன். நாட்டை விட்டு ஓடும் எண்ணம் எனக்குக் கிடையாது. உயர் பதவிகளில் இருந்து ராஜபக்சக்கள் விரட்டியடிக்கும் போராட்டத்திற்குத் திட்டம் தீட்டிய உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் யார் என்பது எனக்குத் தெரியும்.

ஆனாலும், நான் அமைதியாகவே இருக்கின்றேன். ஏனென்றால் உண்மைகள் ஒருநாள் வெளிச்சத்துக்கு வரும். அத்துடன் காலம் ஒரு நாள் பதில் சொல்லியேத் தீரும். ராஜபக்சக்கள் உள்ளடங்கிய பொதுஜன பெரமுன கட்சி மக்கள் ஆதரவை இழந்து விட்டதாக எதிர் தரப்பினர் உளறுவது வேடிக்கையாக இருக்கிறது” என்றார்.

மேலும் அவர் கூறுகையில்,” இலங்கையின் புதிய அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்கள் இந்த நெருக்கடியான நிலைமையில் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். அவர்கள் அனைவருக்கும் எனது ஒத்துழைப்பை வழங்குவேன்" என்றார்.

SCROLL FOR NEXT