அரசியல்

'எப்போது வருகிறீர்கள் கோத்தபய ?': போனில் தொடர்பு கொண்ட ரணில் விக்ரமசிங்கே !

காமதேனு

முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவை தொடர்பு கொண்டு அவர் நாடு திரும்புவதற்கான தேவைகளை இலங்கை அதிபர் ரணில் விக்ரசிங்கே கேட்டறிந்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தொடர்ந்து நடைபெற்ற மக்கள் போராட்டம், புரட்சியாக வெடித்தது. அப்போது அதிபர் மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கிகிறனர். இதனால் ரகசிய வழியாக கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு தப்பிச் சென்றார். அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். அங்கிருந்து தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், சுற்றுலா விசாவில் சிங்கப்பூரில் தங்கியுள்ள கோத்தபய, இலங்கைக்கு ஆக.24-ம் தேதி நாடு திரும்புவார் என்று அவரது உறவினர் தெரிவித்திருந்தார். இதனால், அவர் நாடு திரும்பி வருவதற்குத் தேவையான வசதிகள் குறித்து கோத்தபய ராஜபக்சவை போனில் தொடர்பு கொண்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே விசாரித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, கோத்தபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அதிபர் ரணிலைச் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து முன்னாள் அதிபரிடம், ரணில் விக்ரமசிங்கே பேசியதாக கூறப்படுகிறது.
ஆனால், ஆக.24-ம் தேதி இலங்கை திரும்புவதற்கான அறிிவிப்பை கோத்தபய ராஜபக்ச இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், அவர் வருகை தேதி இதுவரை உறுதி செய்யப்படாமல் உள்ளது.

SCROLL FOR NEXT