அமைச்சர் நேரு- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
அமைச்சர் நேரு- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமைச்சர் நேருவும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் பேசுவது என்ன?- அண்ணாமலை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
அரசியல்

அமைச்சர் நேருவும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் பேசுவது என்ன?- அண்ணாமலை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

காமதேனு

"திமுக என்பது பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கும் ஒரு கட்சி; பணத்தை வைத்து எதையும் வாங்கி விடலாம் என்று நம்பும் ஒரு கட்சி. சந்தேகம் இருப்பின், இந்த காணொளியை பார்க்கவும்" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஈ.பி.கே.எஸ்.இளங்கோவன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கிவிட்டார். மேலும் அமைச்சர்கள் அனைவரும் தொகுதியில் வலம் வருகின்றனர். ஒவ்வொருவரும் வீடு வீடாகச் சென்று வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் போட்டியிடுகின்றனர். ஆனால் இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. டி.டி.வி.தினகரன் தனது கட்சி வேட்பாளரை ஏற்கெனவே அறிவித்துவிட்டார். இதேபோல் நாம் தமிழர் கட்சியும் வேட்பாளரை அறிவித்துவிட்டது.

அண்ணாமலை

இதனிடையே பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அமைச்சர் நேருவும், வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் பேசும் வீடியோவை இணைத்துள்ளார். மேலும், "திமுக என்பது பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கும் ஒரு கட்சி; பணத்தை வைத்து எதையும் வாங்கி விடலாம் என்று நம்பும் ஒரு கட்சி. சந்தேகம் இருப்பின், இந்த காணொளியை பார்க்கவும்" என்று அண்ணாமலை கூறியிருக்கிறார். அமைச்சர் நேரு பேசும் போது, "அவன் என்னத்துக்கு அவன் தண்டம். மந்திரியெல்லாம் கூடாது. தேவை இல்லை. நான் நேற்றே சொல்லிவிட்டேன். எல்லாரும் வந்துடுங்கனு சொல்லிவிட்டேன்.

மாவட்ட நிர்வாகிகளை எல்லாம் நான் கண்டுக்கமாட்டேன். நீங்க அங்க இருங்கனு சொல்லனும்னு நினைச்சேன். நீ எல்லா மாவட்ட தலைவரையும் கூப்பிட்டு காசு பணம் எல்லாம் குடுக்கணும். பிளாட்டினம் மஹாலில் மதியம் எல்லாரையும் கூப்பிட்டு பணம் கொடுத்து செட்டில் பண்ணிட்டு, 30, 31-ம் தேதி, 1-ம் தேதிக்குள்ள எல்லாத்தையும் பண்ணி முடிச்சிடணும். 31 பூத்திலும் 10 ஆயிரம் பேர் ரெடி பண்ணனும், நாளைக்கு தலைவர் ஸ்டாலினே அதிகாரிகளுக்கு வாட்சி, பிரியாணி தரப் போறாரு. இப்போ நான் புறப்பட்டு திருச்சி போய், அங்கிருந்து சென்னை போய், அங்கு கூட்டத்தை முடிச்சிட்டு கோயம்புத்தூர் போய், 31-ம் தேதி ராத்திரி இங்க வந்துருவேன். எல்லாத்தையும் முடிச்சிட்டேன். பழனி அண்ணன் வரதையும், மகேஷ் வந்தா பார்ப்போம். இல்லையென்றால் நம்மலே பண்ணிடுவோம்.

நாசர் 5-க்கு மேல் வேண்டாம் என்கிறான். நாசர்னு போட்டா சங்கடப்பட்டு கிடக்கிறான். அங்க இருக்கற லோக்கல் ஆளுங்க... அண்ணங்கனாலே... விடுதலை சிறுத்தைகள்... அவன் எங்கெல்லாம் கொடுக்கவில்லையோ பார்த்து கொள்ளுங்கள். ஆனால் நம்ம கொடுத்துவிடலாம். நான் கொடுத்துவிட்டேன். செந்தில் பாலாஜியும் கொடுத்துவிட்டார். ஏன் அவன இங்கு ஒக்கார வைக்கணுமா?" என்று பேசியுள்ளனர். இது அங்கிருந்த மைக்கில் பதிவாகியிருக்கிறது. அண்ணாமலை வெளியிட்டுள்ள இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

SCROLL FOR NEXT