டி டி வி தினகரன்
டி டி வி தினகரன் 
அரசியல்

கடலுக்குள் பேனா வைக்க நிதி இருக்கிறது; போனஸ் கொடுக்க நிதி இல்லையா? - தினகரன் கோபம்

காமதேனு

கடலுக்குள் பேனா வைக்க நிதி இருக்கிறது; தீபாவளி போனஸுக்கு நிதி இல்லையா என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தினகரன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 10 சதவீதம் மட்டுமே தீபாவளி போனஸ் வழங்கப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல. கொரோனாவைக் காரணம் காட்டி இந்த ஆண்டும் இத்தகைய முடிவை தி.மு.க அரசு எடுத்திருப்பது கண்டனத்திற்குரியது

கடலுக்குள் பேனா வைக்க தி.மு.க அரசிடம் நிதி இருக்கும்போது, கடமையைச் செய்யும் அரசு ஊழியர்களின் உரிமையான தீபாவளி போனஸில் கை வைப்பது எந்த வகையில் நியாயமாகும்” என தெரிவித்துள்ளார்

தீபாவளி பண்டியை வரும் 24-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு 10 சதவீதம் போனஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், போக்குவரத்துத் துறை, மின்வாரியம், ஆவின், டாஸ்மாக், கூட்டுறவு ஆலைகள் போன்ற பொதுத்துறை நிறுவன தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு, 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணை தொகை என மொத்தம் 10 சதவீதம் போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT