நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி சர்ச்சை பேனர்... மனிதநேய மக்கள் கட்சியைத் தடை செய்ய கோரும் பாஜக!
அரசியல்

சர்ச்சை பேனர்... மனிதநேய மக்கள் கட்சியைத் தடை செய்ய கோரும் பாஜக!

காமதேனு

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் படத்தை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரவவிட்டு மனிதநேய மக்கள் கட்சியைத் தடைசெய்ய வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மணிப்பூர் விவகாரத்தை கண்டிக்கும் விதமாக, நிர்வாணமாக வேதனையுடன் நிற்கும் பெண்ணின் அங்கங்களை தேசியக் கொடிக் கொண்டும் மறைத்து, அவளின் அருகில் ராமன் லட்சுமணனாக மோடியும், அமித்ஷாவும் சிரித்தப்படி நிற்கும் பேனரை வைத்துள்ளனர்.

இந்த பேனர் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இதனைச் செய்த மனிதநேய மக்கள் கட்சியைத் தமிழகத்தில் இருந்து தடை செய்ய வேண்டும் ட்விட்டரில் பாஜகவினர் கொந்தளித்து வருகின்றனர்.

இது தொடர்பாக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, ‘’மனிதநேய மக்கள் கட்சி என்ற பெயரில் தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் இந்த செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்வதோடு, மனித நேய மக்கள் கட்சியை உடனடியாக தடை செய்ய வேண்டும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ‌ர்க‌ளி‌ன் உருவத்தை கேலி சித்திரம் வரைந்ததற்காக சிலரை செய்யும் காவல் துறை, இந்து கடவுளை, நாட்டின் பிரதமரை கேலி சித்திரம் மூலம் அவதூறு செய்யும் பதர்களைக் கைது செய்யாதது ஏன்? மதக் கலவரத்திற்கு வித்திடும் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகளை, தலைவர்களை கைது செய்ய தயங்குவது ஏன்?'' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT