இபிஎஸ்
இபிஎஸ் 
அரசியல்

கேட்கும் நிதியை எப்போதுமே கொடுக்கமாட்டார்கள்... மத்திய அரசை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

காமதேனு

தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை எப்போதும் மத்திய அரசு கொடுப்பதில்லை. அதிமுக, திமுக என எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் மத்திய அரசு நிதி தருவதில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சேலத்தில் அதிமுக சார்பில் கொங்கணாபுரம் உள்ளிட்ட 4 இடங்களில் நீர் மோர் பந்தலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களுடன் பேசியபோது, “ தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை எப்போதும் மத்திய அரசு கொடுப்பதில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விடக் குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும்.

இபிஎஸ்

அதிமுக, திமுக என எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் மத்திய அரசு நிதி தருவதில்லை. அதிமுக அட்சியிலும் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலும் நிதி குறைத்து தான் வழங்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி

குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் 14 ஆயிரம் ஏரிகளில் 6 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டன. நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் அதிமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும். மேட்டூர் அணை அதிமுக ஆட்சியில் தூர்வாரட்டது. அதேபோல மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்தை கிடப்பில் போடப்பட்டுள்ளது. போதைப்பொருள் விவகாரத்தில் அரசு அலட்சியம் காட்டி வருகிறது” என்று அவர் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

தீவிரவாதிகள் தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம்; 6 பேர் படுகாயம்

மார்க் நெக்ஸ்ட்... ஸ்கில்ஸ் ஃபர்ஸ்ட்... பள்ளி மாணவர்களுக்கான டிப்ஸ்!

பீகாரில் இருந்து உ.பி.,க்கு 95 குழந்தைகள் கடத்தல்? - அதிரடியாக மீட்ட குழந்தைகள் நல ஆணையம்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம்... அமெரிக்காவில் கோவை மாணவி கைது!

சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வழக்கு... போர்ச்சுகல் நாட்டில் அன்மோல் பிஷ்னோய் பதுங்கலா?

SCROLL FOR NEXT