அரசியல்

ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறில்லை: ஆளுநர் ரவி பரபரப்பு கருத்து

காமதேனு

ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறில்லை, அதை அரசியலாக்கும்போதுதான் பிரச்சினை ஆகிறது என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் குடிமைப்பணி தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் 80 மாணவர்கள் பங்கேற்ற ‘எண்ணித் துணிக’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாடிய ஆளுநர் ரவி, “ ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறில்லை, ஒன்றிய அரசு என அழைத்து அவமதிக்கும்போதுதான் அது பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இந்தி கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் எந்த மொழியையும் கற்பது தவறில்லை. அது அந்த மக்களுடன் இணைந்து பணியாற்ற உதவும். இந்தியாவில் அதிக மக்கள் இந்தி பேசுவதால், இந்தி கற்றுக்கொள்வது பயன்படும்.

சிரித்த முகத்துடன் சிக்கலை எதிர்கொள்ள வேண்டும். கேள்விகளுக்கு அவசரமாக பதிலளிக்காமல், நிதானமாக பதிலளியுங்கள். பதில் தெரியவில்லை என்றால் தெரியாது என சொல்லவேண்டும், அதனை சங்கடமாக கருத வேண்டாம்” என்று கூறினார். நேற்று சட்டசபையில் உரையாற்றிய ஆளுநர் ரவி, ‘தமிழ்நாடு’, ‘திராவிட மாடல்’ மற்றும் அம்பேத்கர், காமராஜர், பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களை தவிர்த்தது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

SCROLL FOR NEXT