நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்  
அரசியல்

ரூ.4 கோடி விவகாரத்தில் நயினார் நாகேந்திரனுக்கு தலைவலி... வழக்கை நாளை விசாரிக்கிறது உயர் நீதிமன்றம்!

காமதேனு

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை உயர் நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுக்கிறது.

ஏப்ரல் 6-ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்ட போது நெல்லை பாஜக வேட்பாளர் நாகேந்திரனின் கார் ஓட்டுநர் சதீஷ் மற்றும் உதவியாளர்களிடம் இருந்து 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட அந்தப் பணம் தொடர்பாக விளக்கம் அளிக்க நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பியது தாம்பரம் போலீஸ்.

ரயிலில் கொண்டுசெல்லப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட பணம்

அதன்படி ஏப்ரல் 22-ம் தேதி நயினார் உள்ளிட்டோர் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், ரூ.4 கோடி பணம் சிக்கிய விவகாரத்தில் தொடர்புடைய நயினார் நாகேந்திரனை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி நெல்லை தொகுதி சுயேட்சை வேட்பாளர் ராகவன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

உயர்நீதிமன்றம்

அவர் தனது மனுவில், 'தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி ரொக்கம் பிடிபட்டது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரியுள்ளார்.

இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை நாளை விசாரிப்பதாக அறிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இந்த 5 தொகுதிகளில் வெற்றி இழுபறி!

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தைக்கு 2 நாட்கள் விடுமுறை... தேர்தலை முன்னிட்டு அறிவிப்பு!

புதுச்சேரியில் இன்று முதல் 144 தடை உத்தரவு... தேர்தல் ஆணையம் அதிரடி!

தாயைப் பிரிந்த ஏக்கம்... 25 நாட்களாக தவித்த குட்டியானை உயிரை இழந்தது!

நேரிலும், செல்போனிலும் வாலிபர் காதல் டார்ச்சர்.... மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை!

SCROLL FOR NEXT