பொன். ராதாகிருஷ்ணன் 
அரசியல்

கலைவாணர் பெயர் இல்லை என்றால்... - கலகம் செய்யும் பொன்னார்!

காமதேனு

தோல் சீலைப் போராட்டத்தின் 200-வது ஆண்டுவிழாவுக்காக மார்ச் 6-ம் தேதி நாகர்கோவில் வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதுசமயம், மாநகராட்சியால் புதுப்பித்துக் கட்டப்பட்ட அரங்கம் ஒன்றையும் திறந்துவைக்கிறார் முதல்வர். இந்த அரங்கமானது ஏற்கெனவே ’கலைவாணர் அரங்கம்’ என்று இருந்தது. அதை மாற்றி, ‘கலைஞர் அரங்கம்’ என பெயர் சூட்டப்போவதாக அறிவித்தார் நாகர்கோவில் திமுக மேயர் மகேஷ்.

இதையடுத்து கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் சமூகத்தினர் இதைக் கண்டித்து போராட்டத்தில் குதித்தனர். இவர்களுக்கு ஆதரவாக பாஜகவும் களத்தில் குதித்ததால் உஷாரான உளவுத்துறை, ‘விஷயம் வில்லங்கப் பாதையில் பயணிக்கலாம்’ என எச்சரிக்கை மணி அடித்தது. இதையடுத்து, புதுப்பிக்கப்பட்ட அரங்கத்துக்கு கலைவாணர் பெயரே நீடிக்கும் என அரசாணையே வெளியிட்டுவிட்டது அரசு.

அரசாணை வந்துவிட்டாலும் இன்னமும் அரங்கிற்கு கலைவாணர் பெயர் சூட்டப்படவில்லை. இதையடுத்து, “ கலைவாணர் பெயர் அதில் இடம்பெறாவிட்டால் முதல்வர் இந்நிகழ்வில் பங்கேற்கக் கூடாது” என போகுமிடமெல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறார் பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். கலைவாணரின் பிள்ளைமார் சமூகத்தினரும் இந்த விவகாரத்தில் திமுக தலைமையை கரித்துக்கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT