தர்மேந்திர பிரதான்
தர்மேந்திர பிரதான் 
அரசியல்

குஜராத்தில் தொடங்கிய கல்வி அமைச்சர்கள் மாநாடு! புறக்கணித்தது தமிழக அரசு!

காமதேனு

குஜராத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் இரண்டு நாட்கள் நடைபெறும் கல்வி அமைச்சர்கள் மாநாட்டைத் தமிழக அரசு புறக்கணித்துள்ளது.

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதிய கல்விக் கொள்கைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதே நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவாகத் தமிழகம் முழுவதும் பேசி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினமும் ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பொன்முடி, “3,5,8ம் வகுப்புகளுக்குக் கூட பொதுத்தேர்வு நடத்தக்கூடிய நிலை புதிய கல்விக் கொள்கையில் இருக்கிறது. இதை எல்லாம் எப்படி ஏற்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது மற்றும் பாடத்திட்டம் மாற்றி அமைப்பது குறித்து இன்று குஜராத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நாடு முழுவதும் உள்ள கல்வி அமைச்சர்கள் மாநாடு தொடங்கியது. இரண்டு நாள் நடைபெறும் இந்த கருத்தரங்கில் நாடு முழுவதும் உள்ள மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தின் சார்பில் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளனர். மேலும் தமிழக அரசின் சார்பில் கல்வித்துறை அதிகாரிகளும் இதில் கலந்து கொள்ளவில்லை.

SCROLL FOR NEXT