அண்ணாமலை
அண்ணாமலை ’’ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள், தடுத்து நிறுத்துங்க ’’ - இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அண்ணாமலை கடிதம்
அரசியல்

ஈரோடு கிழக்கில் ஒரு ஓட்டுக்கு 10,000 கொடுக்க திமுக திட்டம்: தேர்தல் ஆணையத்திற்கு அண்ணாமலை கடிதம்

காமதேனு

’’ ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக ஒரு ஓட்டுக்கு ரூ.5,000 முதல் 10,000 கொடுக்கிறார்கள், புகார் அளித்தும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி கண்டுக் கொள்ளவில்லை. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

இதுத் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘’கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய காரணத்தினால் 22 மாதங்களாக செய்த ஊழல் பணத்தை இந்த இடைத்தேர்தலில் செலவிட முனைகிறது.

கடந்த மாதம் 29-ம் தேதி, பணம்பட்டுவாடா தொடர்பாக அமைச்சர் நேரு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடனான ஆடியோவை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் சமர்பித்து, ஈரோட்டில் ஜனநாயக படுகொலை நடைபெறுகிறது என புகார் அளித்தோம். இதேபோல பிப்ரவரி 11-ம் தேதி தேர்தல் பார்வையாளர்கள் திமுகவினர் அளிக்க வைத்திருந்த டோக்கன்களை பறிமுதல் செய்தனர்.

தற்போது ஒரு ஓட்டிற்கு ரூ.5,000 முதல் 10,000 வரை கொடுக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனநாயகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் எங்களது வேட்பாளருக்கு பின்னடவை ஏற்படுத்தும்.

இதுத் தொடர்பாக பலமுறை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும் அவர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆளும் அரசின் கைப்பாவையாக அவர் உள்ளார். தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT