அரசியல்

தமிழில் தான் கையெழுத்துப் போடணும்: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை புது உத்தரவு!

காமதேனு

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களின் கையொப்பத்தை இனி தமிழில் இடவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும், இனிஷியலை தமிழில் தான் எழுத வேண்டும் எனத் தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பிறப்பித்திருந்த உத்தரவில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும், தங்கள் முன்னெழுத்து மற்றும் பெயரைத் தமிழில் தான் எழுத வேண்டும். அரசு விழா, சுற்றறிக்கைகள் அனைத்தும் தமிழிலேயே இருக்க வேண்டும். இதை முதன்மை கல்வி அலுவலர்கள், தங்களது பகுதி ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தமிழக அரசு ஆணையைச் சுட்டிக்காட்டி கல்வி ஆணையர் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளி மாணவர்கள் தங்கள் முன்னெழுத்தைத் தமிழில் தான் எழுத வேண்டும். கையொப்பத்தையும் தமிழில் இட வேண்டும். வருகைப்பதிவேடு உள்ளிட்டவற்றில் மாணவர்கள் பெயரை எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே பதிவு செய்திட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT