ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்  திடீர் மாரடைப்பு: மருத்துவமனையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அனுமதி
அரசியல்

திடீர் மாரடைப்பு; மருத்துவமனையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அனுமதி: டாக்டர்கள் தீவிர கண்காணிப்பு

காமதேனு

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவேரா சம்பத் மாரடைப்பால் உயிரிழந்ததையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. மகன் இறந்த நிலையில், அவரது தந்தையான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,556 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகளும் பெற்றிருந்தனர். இருவருக்குமான வாக்குகள் வித்தியாசம் 66,575 வாக்குகள் ஆகும்.

இந்த நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடந்த 10-ம் தேதி எம்.எல்.ஏவாக பதவி ஏற்றார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனிடையே, ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு இன்று இரவு 8.45 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக சென்னை பாேரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அவரது மகன் ஈவேரா சம்பத் மாரடைப்பால் உயிரிழந்தார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

SCROLL FOR NEXT