அரசியல்

மாலத்தீவில் கடும் எதிர்ப்பு: சவுதி விமானத்தில் சிங்கப்பூர் தப்பினார் கோத்தபய!

காமதேனு

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டு பொருளாதார நெருக்கடியால் கடந்த 9-ம் தேதி ஏற்பட்ட மக்கள் புரட்சி காரணமாக தனது பதவியை ஜூலை 13-ம் தேதி ராஜினாமா செய்வதாக அதிபர் கோத்தபய ராஜபக்ச அறிவித்தார். ஆனால், அவர் பதவி விலகாமல் ராணுவ ஜெட் விமானத்தில் மாலத்தீவு சென்றார். அங்கு அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்து SQ437 என்ற விமானத்தில் சிங்கப்பூர் செல்ல கோத்தபய ராஜபக்ச திட்டமிட்டிருந்தார். ஆனால் பாதுகாப்பு நிலைமை காரணமாக அவரின் பயணம் தடைப்பட்டது.

இந்த நிலையில், கோத்தபய ராஜபக்ச மாலத்தீவில் இருந்து சவுதி விமான சேவை நிறுவனத்திற்குச் சொந்தமான எஸ்.வீ. 788 விமானத்தில் இன்று சிங்கப்பூர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவருடன், அவரது மனைவி மற்றும் 2 பாதுகாப்பு அதிகாரிகள் இந்த விமானத்தில் பயணித்துள்ளதாக கூறப்படுகிறது. சிங்கப்பூருக்கு இரவு 7 மணிக்குச் சென்றதும் தனது பதவி விலகலை கோத்தபய ராஜபக்ச அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT