அரசியல்

'ஓட்டுமொத்த நகரத்தையே தோண்டிப்போட்டால்...' - இயக்குநர் சீனு ராமசாமி ஆதங்கம்

காமதேனு

மழைநீர் வடிகால் மரணங்கள் குறித்து இயக்குநர் சீனு ராமசாமி தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீனு ராமசாமி வெளியிட்டுள்ள ட்வீட்டில், “நகரத்தை சரி செய்து நெறிப்படுத்த வேண்டும். அது ஒரு சிகை தொழிலாளி

முடித்திருத்தம் செய்வது போல ஒரு ஓரத்திலிருந்து பரவி வரவேண்டும். ஒட்டுமொத்த நகரத்தையே தோண்டிப்போட்டால் பாதசாரி பயில்வானாக இருந்தாலும் தடுக்கி விழுவான்” என தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த மாங்காடு நகராட்சியில் வேலைக்கு செல்வதற்காக நடந்து சென்றபோது, மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கால் தவறி விழுந்த லட்சுமிபதி (42) என்பவர் நேற்று உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் தனியார் செய்தி தொலைக்காட்சி ஊழியர் ஒருவர் இதேபோல் சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக பல இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அந்த பணிகள் இன்னும் முடிவடையாத காரணத்தால் பல இடங்களில் மழைநீர் தேங்கி விபத்துகள் நடக்கின்றன. சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் கடுமையான கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT